திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள அரசு கலை; அறிவியல் கல்லூரியின் பின்புறம் உள்ள திருமூர்த்தி வாய்க்காலை ஒட்டி அதிகப்படியாக நெகிழிக் குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைகிறது.
நெகிழி எரிப்பு: மக்களுக்கு மூச்சுத் திணறல்! - Thirupur
திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் உள்ள குப்பைக்கிடங்கில் இருந்த நெகிழி எரிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
அதிகளவில் நெகிழி எரிக்கப்பட்டு மக்கள் அவதி
இதனால் அப்பகுதியைச் சுற்றி இருக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாச சிக்கல்கள் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் அப்பகுதியில் தினந்தோறும் ஏராளமான குப்பைகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் அடித்துவருகிறது.