திருப்பூர், மடத்துக்குளம், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் இரண்டு நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இன்று உடுமலை பேருந்து நிலையம் முன்பு பரப்புரையில் ஈடுபட்ட அவர், ”பொது மக்களிடமிருந்து குறைகளை தீர்க்க தமிழக அரசு ’1300’ என்ற எண்ணை அறிமுகப்படுத்த உள்ளது.
13 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்து அடிமையாக இருந்த திமுக தான், நீட் தேர்வை கொண்டு வந்தது. அதிமுக என்றும் யாருக்கும் அடிமையாக இல்லை. தமிழக மக்களின் நலன் கருதி எதைப்பெற வேண்டுமோ, அதை மத்திய அரசிடம் பெற்று வருகிறோம். குறைகளை மட்டுமே கண்டுபிடிக்கும் கட்சி திமுக. ஸ்டாலின் சொல்லி நாங்கள் எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.