சென்னை : திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து காற்றாலை நிறுவனங்கள் எத்தனை கம்பங்களை அமைத்துள்ளன என அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளின் எந்த வித அனுமதியும் பெறாமல் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ஸ்பிரிங் ரெனிவெபில் எனர்ஜி என்ற தனியார் நிறுவனம் 349 காற்றாலைகளை அமைத்து வருவதை எதிர்த்து சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தலைமை நீதிபதி விசாரணை
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் காற்றாலை நிறுவன தரப்பில், ஈரோடு பகுதியில் காற்றாலை மூலம் 300 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்வதற்காக ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்பரேசன் நிறுவனம் காற்றாலைகளை அமைக்க அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.