திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான், குட்கா போன்ற போதைப்பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என்று உணவுபாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்து வருகின்றனர். அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் வைத்து அழிப்பது வழக்கம்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் திருட்டு; அலுவலர்கள் மெத்தனம்! - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மெத்தனம்
திருப்பூர்: மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை அலுவலர்கள் கடைகளில் சோதனை நடத்தி, பறிமுதல் செய்து ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட போதைப்பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தின் வெளியே சீல்கள் உடைக்கப்பட்டு சிதறிக்கிடந்துள்ளது.அதுமட்டுமின்றி அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. உணவுபாதுகாப்புத்துறை அலுவலர்களின் மெத்தனத்தால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மீண்டும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.