உலகில் கைவினைப் பொருள்களுக்கான மதிப்பும், தேடலும் மிகவும் அதிகம். ஏனென்றால் கைகளில் தயாரிக்கக் கூடியப் பொருள்கள் கலைநயத்துடனும், நுட்பமாகவும் இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களைச் சொல்லலாம். அந்தக் கார்களுக்கு இருக்கும் மதிப்பும், மரியாதையும் பிற கார்களுக்கு அவ்வளவாகக் கிடையாது. பல்வேறு காரணங்களால் அக்கார்கள் அனைவராலும் விரும்பப்பட்டாடலும், முக்கியமான காரணம் அவை கைகளால் தயாரிக்கப்படுபவை.
தேங்காய் சிரட்டையில் கலைநயம் - கைவினையில் அசத்தும் கல்லூரி மாணவி!
திருப்பூர்: கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் நேரத்தை வீணடிக்காமல் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என ஆரம்பித்துத் தற்போது அதன் மூலமே வருமானம் ஈட்டி அசத்தி வரும் திருப்பூர் கல்லூரி மாணவி குறித்த சிறப்புத்தொகுப்பு.
அப்படி ரோல்ஸ் ராய்ஸில் தொடங்கி சாதாரண கிப்ட் வரை கைவினைப் பொருள்களுக்கான மவுசு அதிகமாகவே உள்ளது. கைவினைப் பொருள்கள் பல்வேறு பரிணாமங்களை கொண்டது. அது கைவினை கலைஞர்களுக்கு ஏற்றவாறு தன்னை புதுப்பித்துக்கொள்ளும்.
எப்படி என்றால் உடைந்த முட்டை ஓடுகள்மீது உருவங்கள் வரையப்பட்டு மதிப்புகூட்டுப் பொருளாக்கப்படலாம். சாதாரண பென்சிலின் நுனிப்பகுதியில் சிலை வடிவமைக்கபடலாம். பயனற்ற பொருள்கள் அலங்காரப் பொருள்கள் ஆகலாம். ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால் கலையும், கைவினையும் சேர்ந்தால் குப்பையும் வைரமாகும்.
மேலும் இந்தக் கலையை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பதோடு, விற்பனைக்காக ஒரு புதிய கடையை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிங்க:முப்பரிமாண தோற்றத்தில் கைவினை பொருள்கள் விற்பனை