தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

50 க்கு 43 : மிஸ்சிங் பர்சன் ட்ரேசிங் டீமில் அசத்தும் முதுநிலை காவலர்!

காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்க தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட 50 வழக்குகளில், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் சென்று 43 வழக்குகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து மீட்டு கொண்டு வந்த முதுநிலை காவலர் பாலமுருகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மிஸ்சிங் பர்சன் ட்ரேசிங் டீமில் அசத்தும் முதுநிலை காவலர்
மிஸ்சிங் பர்சன் ட்ரேசிங் டீமில் அசத்தும் முதுநிலை காவலர்

By

Published : Jan 22, 2021, 6:43 AM IST

திருப்பூர்: தமிழ்நாடு காவல்துறையை 'ஸ்காட்லாந்து யார்ட்' காவல்துறைக்கு இணையாக சொல்வதுண்டு. உண்மையில் அவர்களை விட தனிநபர் குற்றப்புலனாய்வில் அதிக வழக்குகளைக் கையாண்டு ஸ்காட்லாந்து யார்டுகே சவால் விடும் நிலையில் தான் தமிழ்நாடு காவல்துறை விளங்கி வருகிறது.

அப்படி தான் கையாண்ட வழக்குகளில் 97 விழுகாட்டிற்கும் மேல் வெற்றி பெற்ற திருப்பூர் முதுநிலை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருப்பூர் மாவட்டதில், காவல் துறையானது 23 காவல் நிலையங்கள், 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து காவல் நிலையங்களிலும், ஆண்டுதோறும் ஆள்மாயம் பிரிவின் கீழ் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் காணாமல் போனது தொடர்பான பல வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க 'மிஸ்ஸிங் பெர்சன் ட்ரேசிங் டீம்' எனப்படும் காணாமல் போன நபர்களை கண்டுபிடிக்கும் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறும். இதில் பல வழக்குகள் பல ஆண்டுகள் கண்டுபிடிக்க இயலாமல் போவதும் உண்டு.

பல்லடம் காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிபவர் பாலமுருகன். கடந்த 2020 ஆம் ஆண்டில் பல்லடம் காவல் நிலையத்தில் ஆள்மாயம் பிரிவின் கீழ் பெண்கள், சிறுவர், சிறுமியர் காணாமல் போனது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 50 வழக்குகள் பாலமுருகன் வசம் ஒப்படைக்கப்பட்டன.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட 50 வழக்குகளில், 43 வழக்குகளில் காணாமல் போனவர்களை பாலமுருகன் கண்டுபிடித்துள்ளார். அவரால் கண்டுபிடிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் அனைவரும் அவரவர் பெற்றோர், காப்பாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அதிகமாக காணாமல் போனவர்களை கண்டுபிடித்த பெருமை முதுநிலை காவலர் பாலமுருகனுக்கு கிடைத்துள்ளது. இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் பாலமுருகனை நேரில் அழைத்து வெகுமதியளித்து, சிறப்பாக பணி செய்துள்ளதாக கூறி பாராட்டியுள்ளார். சமூக ஊடகங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து, "காணாமல் போனவர்களைத் தேடி கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். காவல் நிலையங்களுக்கு பெரும்பாலும் இளம்பெண்கள், சிறுவர், சிறுமியர் காணாமல் போன வழக்குகளே வரும். பிள்ளைகளை காணாமல் தவிக்கும் பெற்றோரின் மனநிலையை புரிந்து கொண்டு விரைவாக அவர்களை கண்டுபிடிக்க செயல்படுவோம். ஏற்கெனவே குற்றப்பிரிவில் பணி செய்ததால் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது எனக்கு சற்று எளிதாக உள்ளது.

கண்டுபிடித்தவற்றில் சில வழக்குகளின் அனுபவங்களை மறக்க இயலாது. அவற்றில் ஏற்படும் அனுபவங்களே அதற்கு காரணம். கடந்த ஆண்டில் 17 வயது சிறுமி மற்றும் 18 வயதுடைய இளம்பெண் ஆகியோரை இருவேறு வழக்குகளில் கண்டுபிடிக்க கேரளா சென்றது மறக்க இயலாத அனுபவம். எனது பணியை காவல் கண்காணிப்பாளர் பாராட்டியது ஊக்கமளிப்பதாக உள்ளது" என பாலமுருகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சாரட் வண்டியில் வந்த சாதனை வீரர் நடராஜன்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details