உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை நல்லமுறையில் பெய்ததை அடுத்து அமராவதி அணை மூன்று முறை முழு கொள்ளளவை எட்டியது.
பாசனத்திற்காக அமராவதி அணை திறப்பு!
திருப்பூர்: அமராவதி அணையிலிருந்து விவசாயப் பாசனத்திற்காக முதலமைச்சர் உத்தரவின்பேரில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இச்சூழலில், பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதன்படி அமராவதி அணையிலிருந்து இன்று (செப். 20) காலை 9 மணியளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்வில், அமராவதி அணையின் மேல்பகுதியில் அமைந்துள்ள தானியங்கி பொத்தானை அழுத்தி கால்நடைத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அணையை திறந்து வைத்தார்.
இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளிலுள்ள 51 ஆயிரம் ஏக்கர்கள் பயன்பெறவுள்ளன. மேலும், அமராவதி அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரின் மூலம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்குள்பட்ட 15 குளங்கள், நான்கு தடுப்ணைகள், 12 வேடப்பட்டி தொடர் தடுப்பணைகளுக்கு விவசாயப் பயன்பாட்டிற்காக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.