தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா தொற்றால் இளைஞர் உயிரிழப்பு - கரோனா பாதிப்பு

தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்று (ஜூன் 13) உயிரிழந்தார்.

Corona death
Corona death

By

Published : Jun 13, 2020, 1:51 PM IST

தூத்துக்குடி மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள புள்ள கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (34). சென்னையில் தனியார் நிறுவனத்தில் கட்டுமான பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த ஜூன் 7ஆம் தேதி தன் மனைவி அருள்மொழி (28), மகள் சிஸ்டிகா (4), ஆகியோருடன் சென்னை வண்டலூரில் இருந்து புறப்பட்டு வந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் ஜூன் 10ஆம் தேதி இவருக்கும், இவரது மனைவி அருள்மொழிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் கரோனா தீவிரம் காரணமாக மணிகண்டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அருள்மொழி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மணிகண்டன் இன்று (ஜூன் 13) அதிகாலை சுமார் 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதனால் தூத்துக்குடியில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி கரோனா தொற்றால் தூத்துக்குடியைச் சார்ந்த மூதாட்டி உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி கடலாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயரிழந்த நிலையில், இன்று (ஜூன் 13) வெம்பக்கோட்டை அருகில் உள்ள புள்ள கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து, மணிகண்டனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டு, டிவிடி சிக்னல் அருகில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details