தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் உள்ள வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 76- ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் முத்துமாரி, கரிசல்பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பள்ளியில் தற்போது 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள் இந்நிலையில், மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிராம பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் டேபிள், நாற்காலி, பீரோ, மின்விசிறி, மற்றும் ரொக்கம் உள்ளிட்டவற்றை ஊர்வலமாக கொண்டு சென்ற மக்கள் பள்ளிக்கு வழங்கினர்.
இதையும் படிங்க: என் நாட்டை நேசிக்கிறேன்.. அரசாங்கத்தை அல்ல.. பி.சி. ஸ்ரீராம் ட்வீட்