தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்' - தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு - ஸ்டெர்லை ஆலையை திறக்க வேண்டும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என ஆலையைச்சுற்றியுள்ள 10 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

’ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்’- ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
’ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்’- ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

By

Published : Sep 12, 2022, 7:41 PM IST

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் உள்ள மீளவிட்டான், மடத்தூர், பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், அய்யனடைப்பு, சில்லாநத்தம், ராஜாவின்கோவில், சாமிநத்தம், காயலுரணி ஆகிய 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

அப்போது மனு அளிக்க வந்த மடத்தூரை சேர்ந்த முத்துலெட்சுமி கூறுகையில், ”ஸ்டெர்லைட் ஆலையால் எந்த வித பாதிப்பும் இல்லை. ஆலையினை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழலில் உள்ளது. ஆலையில் வேலைவாய்ப்பு இல்லாததால் வெளியூருக்குச் சென்று வேலை செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

'ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்' - தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

எங்களைப்போன்று பலரும் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். ஆகையால், வேலை வாய்ப்பினை அதிகரிக்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:அச்சுறுத்தும் செல் பூச்சிகள்.. தடுக்கக்கோரி கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ABOUT THE AUTHOR

...view details