இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”குமரி மாவட்டம் தக்கலை பீர் முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழா வரும் மார்ச் 9ஆம் தேதி திங்கள்கிழமை நடக்கவிருக்கிறது. அதேபோல வரும் மார்ச் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா நடைபெறுகிறது. இத்திருவிழாக்களை முன்னிட்டு 9, 10ஆம் தேதிகளில் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
9, 10ஆம் தேதிகளில் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - கன்னியாகுமரி
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் தக்கலை பள்ளிவாசல் திருவிழாவை முன்னிட்டும், மண்டைக்காடு கோயில் திருவிழாவை முன்னிட்டும் இரண்டு நாள்கள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
festival
அதன்படி, இவ்விரு நாள்களிலும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்படாது. மேலும், மார்ச் 9ஆம் தேதி விடுமுறைக்கு ஈடாக மே மாதம் 9ஆம் தேதி அன்றும், மார்ச் 10ஆம் தேதி அன்றும் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறைக்கு ஈடாக ஜூன் மாதம் 13ஆம் தேதியன்றும் வேலை நாளாக இருக்கும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி