முகிலன் மீட்பு கூட்டியக்கம் ஆலோசனைக் கூட்டம் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "சுற்றுச்சூழல் போராளியான முகிலன் காணாமல் போய் நூறு நாட்களுக்கும் மேல் ஆகிறது. ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சில காவல்துறை அலுவலர்களே காரணம் என்று முகிலன் வெளியிட்ட ஆதாரபூர்வமான வீடியோவை தொடர்ந்து, அவர் காணாமல் போயுள்ளார்.
முகிலன் குறித்த உண்மையை இன்னும் மூன்று வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு, மக்கள் முன்பு நிரூபிக்க வேண்டும். முகிலன் வெளியிட்ட வீடியோவில் உள்ள காவல் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை சட்டபூர்வமாக எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையைும் நிரந்தரமாக மூடுவதற்கு கொள்கை ரீதியாக சட்டமியற்ற வேண்டும். இவை அனைத்தையும் நாங்கள் வலியுறுத்தி வரும் 17 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.
'3 வாரத்திக்குள் முகிலன் பற்றிய உண்மை அரசு வெளியிடவேண்டும்'-முகிலன் மீட்பு கூட்டியக்கம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற உறுப்பினர்களும் ஸ்டெர்லைட் ஆலை அகற்றுவது குறித்து அவரவர் தொகுதிகளில் வலுவாக குரல் எழுப்ப வேண்டும்" என தெரிவித்தார்.