தூத்துக்குடி:சந்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமாரலிங்கம். இவரது மகள் மீனாட்சி (22).இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நர்சிங் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் மருத்துவமனையில் பயிற்சி நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், இவர் உடன் படிக்கும் ஒரு மாணவியின் செயின் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
செயினை மீனாட்சி தான் எடுத்திருக்கலாம் என்று அவர் மீது குற்றச்சாட்டப்பட்டதாகவும், இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த மீனாட்சி, அரசு மருத்துவமனையில் ஆசிட்டை எடுத்து குடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மயங்கிய நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று (ஜூன்19) பரிதாபமாக உயிரிழந்தார்.