தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கனிமொழி எம்.பி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு!

தூத்துக்குடி: கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சித்த மருத்துவப் பிரிவு விரிவுப்படுத்தப்படும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அரசு மருத்துவமனையில் ஆய்வு.!
தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அரசு மருத்துவமனையில் ஆய்வு.!

By

Published : May 13, 2021, 5:47 PM IST

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ தேவைகள் குறித்து அறிய தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும்; மருத்துவமனையில் கரோனா முன்னெச்சரிக்கைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், உதவி மையம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற மையம் உள்ளிட்டவற்றையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி., செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள், அரசு மருத்துவக்கல்லூரியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர், காயல்பட்டினம், கோவில்பட்டி, விளாத்திக்குளம் அரசு மருத்துவமனை மட்டுமின்றி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனாவுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சித்த மருத்துவப் பிரிவும் நிறுவி,மருத்துவ சேவை விரிவுபடுத்தப்படுகிறது.

இதில் கூடுதலாக 8 சித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறப்புப் பயிற்சியாளர்கள் மூலம் யோகாசனம், பிராணயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட இயற்கை பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது' என்றார்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அரசு மருத்துவமனையில் ஆய்வு!

ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்ஸிஜன் விநியோகம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details