தூத்துக்குடி மாவட்டம் செல்வன் கொலை வழக்கு திசையன்விளை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் ஹரி, கிருஷ்ணன் மற்றும் முன்னாள் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் ஆள் கடத்தல், கொலை வழக்கு உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி காவல் துறை டிஜிபி திரிபாதி கடந்த 21ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் இதுவரை சின்னதுரை மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருமணவேல் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இரண்டு பேர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இதில் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து, வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் வழக்கின் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் அனில் குமாரிடம் செப்டம்பர் 23ம் தேதி ஒப்படைத்தார்.