தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா ஆய்வுக் கூட்டம்: தூத்துக்குடி விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு வரவேற்பு! - தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி: நாகர்கோவிலில் நடக்கவிருக்கும் கரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Thoothukudi Airport
முதலமைச்சருக்கு வரவேற்பு

By

Published : Nov 10, 2020, 1:25 PM IST

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்தடைந்தார். தூத்துக்குடி வந்த அவரை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜலட்சுமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேஷ் தாஸ், தென் மண்டல ஐஜி முருகன், தென்மண்டல சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.

முதலமைச்சருக்கு வரவேற்பு

தூத்துக்குடி வந்த முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சியினர் வழிநெடுகிலும் முதலமைச்சருக்கு மலர்தூவி மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து அவர் சாலை மார்க்கமாக நாகர்கோவிலில் நடைபெறும் கரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச்சென்றார்.

இதையும் படிங்க: திருத்தணிகாச்சலம் குண்டர் சட்டம் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details