தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு நாள் - கனிமொழி எம்பி நேரில் ஆறுதல் - Tamilnadu latest news

சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது திருவுருவ படத்திற்கு கனிமொழி எம்பி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கனிமொழி எம்பி
கனிமொழி எம்பி

By

Published : Jun 22, 2021, 5:51 PM IST

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் கடந்த ஆண்டு காவல் துறையினர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி சிறையில் அடைத்தனர். கோவில்பட்டி சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சாத்தான்குளத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், உயிரிழந்த தந்தை, மகன் ஆகியோரின் உருவ படத்திற்கு கனிமொழி எம்பி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி எம்பி, ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் - குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

ABOUT THE AUTHOR

...view details