தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘உப்பளங்களை கார்ப்பரேட் போல அல்ல; கூட்டுறவுச் சங்கமாக நடத்துக!’ - கனிமொழி

தூத்துக்குடி: சத்யா நகர் பகுதியில் உள்ள உப்பளங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களிடம் மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

கனிமொழி எம் பி

By

Published : Sep 9, 2019, 4:53 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழைவரை, சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர். உப்பளத் தொழிலாளர்கள் தங்களுக்கு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கைவைத்திருந்தனர்.

இதையடுத்து இன்று தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள, எம்ஜிஆர் நகர் பகுதிகளில் இருக்கும் உப்பளத்திற்கு நேரடியாகச் சென்ற கனிமொழி, அங்குள்ள தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது அந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு தடைக் காலங்களில் மீனவர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது போல, மழைக் காலங்களில் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். இதையடுத்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கனிமொழி உறுதியளித்தார்.

உப்பளங்களை பார்வையிட்ட மக்களவை உறுப்பினர் கனிமொழி

தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, “தொழிலாளர்கள் மழைக்காலங்களில் தங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர். திமுக ஆட்சி வந்தவுடன் இவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

உப்பள தொழிலாளர்களுக்குக் கூட்டுறவுச் சங்கம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் எனச் சொன்ன கனிமொழி உப்பளங்களைப் பெரு நிறுவனங்கள் போல் நடத்தாமல், கூட்டுறவுச் சங்கம் போல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details