தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - போராட்டம் - இலவச மின்சாரம்

மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயம் சங்கத்தினர் மின்சார சட்ட மசோதா நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சார சட்ட மசோதா நகலினை எரித்து போராட்டம்
மின்சார சட்ட மசோதா நகலினை எரித்து போராட்டம்

By

Published : Aug 9, 2022, 9:21 AM IST

தூத்துக்குடி : மின்சார சட்ட திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலை முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மின்சார சட்ட மசோதாவை நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. அப்போது சாதாரண ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பை உருவாக்கும் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை தடுக்கும் இந்த மின்சார சட்ட மசோதாவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு விவசாயம் சங்கம் சார்பில் மின்சார சட்ட மசோதா நகலினை எரித்து போராட்டம் நடத்தினர்.

மாவட்ட செயலாளர் புவிராஜ் தலைமையில், நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மின்சார திருத்த சட்ட மசோதா பாதுகாப்பு இல்லாதது - அமைச்சர் செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details