தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டெர்லைட் ஆலை 2ஆம் அலகில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்? - ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் அலகில்

தூத்துக்குடி: சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் அலகில் இன்று(மே.30) முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

sterlite plant in thoothukudi
sterlite plant in thoothukudi

By

Published : May 30, 2021, 11:08 AM IST

Updated : May 30, 2021, 2:23 PM IST

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் அலகுகள் திறக்கப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. இதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 150 மெட்ரிக் டன்னுக்கும் மேல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, மருத்துவப் பயன்பாட்டிற்காக பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள 2ஆம் அலகில் இன்று(மே.30) முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் அலகில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய கண்காணிப்பு குழுவிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இன்று மாலையில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் 500 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு ஆக்சிஜன் அலகுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 135.23 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி!

Last Updated : May 30, 2021, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details