ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் மோகன் தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரிடம் தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக மோகன் வேட்புமனு தாக்கல் - NOMINATION
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக மோகன் வேட்புமனு தாக்கல்
மனுத்தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ், ஓட்டப்பிடாரம் தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டனர். அதிமுக வேட்பாளர் மோகன் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று எனத் தெரிவித்தார்.