தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ மழை காரணமாக கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேல் யாத்திரையை தற்பொழுது மீண்டும் தொடங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேல் யாத்திரை வரும் 7 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு பெற உள்ளது. மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அதனை முடித்து வைக்க உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் தொடர்பான முடிவு எதுவானாலும் அதை தமிழக பாஜக வரவேற்கும். விவசாயிகளின் நீண்டகால தேவையை அறிந்து வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. இதன்படி, விளைபொருளுக்கு நிர்ணயிக்கப்படும் விலையானது அந்த பொருளுக்கான விலை குறைந்தாலும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையின் மதிப்பிலேயே கொள்முதல் செய்ய முடியும். இத்தகைய நல்ல திட்டங்களை புரிந்து கொண்டு இச்சட்டங்களை விவசாயிகள் ஏற்றுள்ளனர்.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னால் அரசியல் கட்சிகளின் தூண்டுதல் இருக்கிறது. இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். தமிழகத்திலும் இது போல் வேளாண் சட்டங்களை வைத்து திமுக பெரிய போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்தது. அந்த சதி வேலைகள் எல்லாம் முறியடிக்கப்பட்டுள்ளது.
’வேளாண் திருத்த சட்டங்களுக்கு தமிழக விவசாயிகள் ஆதரவு’ பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இந்து ஏழை மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வோம். பிற்படுத்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவராக நான் செயல்பட்ட காலத்தில் 6 தலித் உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சரியான நேரத்தில் முறையான அறிவிப்பு வெளிவரும் ” என்றார்.
இதையும் படிங்க: போராட்டத்தை அறிவித்த திராவிடர் கழகம்