தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பித்தவர்கள் யாரும் சாதித்துக் காட்டவில்லை - கடம்பூர் ராஜு - அஇஅதிமுக

தூத்துக்குடி: மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது சொந்த ஊரான எட்டயபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்தார்.

bharathi
bharathi

By

Published : Dec 11, 2020, 12:00 PM IST

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி விடுதலைப் போராட்ட தியாக சீலர்கள் பிறந்த மண். அந்த வகையில் இன்று (டிச. 11) மகாகவி பாரதியார் பிறந்தநாள் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் அவர் பிறந்த மண்ணிலே மகாகவி பாரதி பிறந்தநாள் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை அளித்து சிறப்பான முறையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பித்தவர்கள் யாரும் சாதித்துக் காட்டவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு
ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் புதிய கட்சி தொடங்குவது ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்வது இயற்கைதான். இதைத் தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கும் நடைமுறைதான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த காலத்திலேயே நிறைய பேர் கட்சியைத் தொடங்கினார்கள் யாரும் சாதித்துக் காட்டவில்லை. அதேபோலத்தான் இன்றைக்கும் உள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்தனர். இதுபோல் பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி: ஆன்லைன் முன்பதிவை தொடங்கிய திருப்பதி

ABOUT THE AUTHOR

...view details