தூத்துக்குடி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே நடைபெற திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று (பிப். 6) நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, 36ஆவது வார்டில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும், அதற்கு அனைவரும் நாம் ஒற்றுமையோடு இருந்து மு.க. ஸ்டாலினுக்கு வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் கூட்டத்தில் பேசினார்.
'முதலமைச்சருக்கு தோள் கொடுப்போம்'
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இல்லாத நிலை இருந்தது. மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் மட்டும்தான் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் என்பதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலை அரசு அறிவித்துள்ளது.