தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக, கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாள்களில் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை மற்றும் கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை, சோமாஸ் கந்தர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடைபெற்றது.