தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொங்கு நாடு... நாங்கள் பேசவில்லை - கடம்பூர் ராஜு

கொங்கு நாடு அமைப்பது தொடர்பாக நாங்கள் எந்தவித கருத்தும் கூறவில்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Alagu Muthu kone
Alagu Muthu kone

By

Published : Jul 11, 2021, 6:25 PM IST

Updated : Jul 11, 2021, 6:50 PM IST

தூத்துக்குடி: சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 311ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கட்டாளங்குளத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்துகொண்டார்.

அங்குள்ள அழகு முத்துக்கோனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கடம்பூர் ராஜு, "நாங்கள் ஆட்சி பொறுப்பில் இல்லை. கொங்கு நாடு அமைப்பது தொடர்பாக நாங்கள் எந்தவித கருத்தும் கூறவில்லை. எனவே அதை தெரிவித்திருந்தவர்கள்தான் கருத்து கூற வேண்டும்.

முயலைவிட வேகமாக..

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நான்கு நாள்கள் நடந்தன. இதில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என ஆணித்தரமாக நாங்கள் கருத்தை பதிவு செய்துள்ளோம்.

கிடைத்த இரண்டு நாள்களில் திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவை ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்தோம். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முயலைவிட வேகமாக அதிமுக செயல்படும்" என்று தெரிவித்தார்.

Last Updated : Jul 11, 2021, 6:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details