தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்தன' - சிறைத்துறை ஆவணம் தகவல்!

தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சிறைக்கு அழைத்து வரும் முன், அவர்களது உடலில் காயங்கள் இருந்ததாக சிறைத்துறை ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.

custody
custody

By

Published : Jun 29, 2020, 8:43 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் மெயின் பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று இரவு ஊரடங்கை மீறி கடையைத் திறந்து வைத்திருந்த விவகாரத்தில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் காவல் துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக்கூறி, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 22ஆம் தேதி இரவு பென்னிக்ஸுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிறிது நேரத்தில் இறந்தார். ஜெயராஜூம் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் உயிரிழந்தார்.

காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், வணிக அமைப்புகள் இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்து வருகிறார்கள்.

காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் தான் தந்தை, மகன் இருவரும் இறந்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், சிறைக்கு அழைத்து வரும் முன், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உடலில் காயங்கள் இருந்ததாக சிறைத்துறை ஆவணம் மூலம் தெரிய வந்துள்ளது.

இதேபோல், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கும்போதும் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜின் உடல்களில் காயங்கள் இருந்ததாக அரசு மருத்துவர் பாலசுப்பிரமணி, விசாரணை நீதிபதியிடம் விளக்கமளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details