தூத்துக்குடி: சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு தமிழக கடற்கரை பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்த கடலோர காவல் படையினருடன் அந்த மாவட்டத்தில் உள்ள காமராஜ் கல்லூரி, ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், 100-க்கும் மேற்பட்டோர் அழைத்துசெல்லப்பட்டனர்.
ஆனால், முத்து நகர் கடற்கரையில் எந்தவித பிளாஸ்டி குப்பைகள், அசுத்தங்கள இன்றி சுத்தமாக இருந்தது. செல்பி எடுத்தும் கடற்கரையில் விளையாடியும் பொழுதை கழித்தனர். அதோடு குப்பைகள் இருக்கும் சுத்தம் செய்யப்பட வேண்டிய கடற்கரை எங்களை அழைத்துச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஏதோ கடமைக்காக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுள்ளது.