தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'செம' - வியாபாரிகளுக்கு வாழை இலை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தூத்துக்குடி கலெக்டர்! - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடியில் வியாபாரிகளுக்கு வாழை இலை அளித்து மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வியாபாரிகளுக்கு வாழை இலை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்
வியாபாரிகளுக்கு வாழை இலை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்

By

Published : Jul 29, 2022, 6:23 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவுப்பொருள்களை பொட்டலமிட்டு வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அண்மையில் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இன்று(ஜூலை.29) புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள டீக்கடை, வடை கடைகளில் பொது மக்களுக்கு காகிதம் பயன்படுத்த வேண்டாம் எனக்கூறிய அவர், வியாபாரிகளுக்கு வாழை இலைகளை கொடுத்து விழிப்புணர்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் அனைத்துக்கடைகளிலும் வாழை இலையில் வடை, பஜ்ஜி, போண்டா பரிமாறப்படுகிறது. அதுமட்டுமின்றி பஜ்ஜி, போண்டா ஆகிய பதார்த்தங்கள் வைக்கின்றபோது கொசுக்கள் அண்டாதவாறு அதனைச்சுற்றி வலை போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வியாபாரிகளிடம் அபராதம் வசூல் செய்வதை இரண்டு வாரத்திற்குள் நிறுத்தி, வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு செய்யப்படும். தொடர்ந்து வியாபாரிகள் வாழை இலை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வாழை இலை அளிக்கப்பட்டது’ எனக் கூறினார்.

வியாபாரிகளுக்கு வாழை இலை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்

இதையும் படிங்க:கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 பேருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி!

ABOUT THE AUTHOR

...view details