தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திராவிட மாடல் திட்டம் என்றாலே.. தூத்துக்குடியில் பாஜக வழக்கறிஞர் சாடல் - தூத்துக்குடியில் பாஜக வழக்கறிஞர் சாடல்

திராவிட மாடல் திட்டம் என்றாலே ஒரு நாள் மிக பெரிய அளவில் கொடியசைத்து தொடங்கி வைப்பது, மறு நாள் அத்திட்டம் கேட்பாரற்று கிடக்கும் என தூத்துக்குடியில் பாஜக வழக்கறிஞர் வாரியார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜக வழக்கறிஞர் சாடல்
பாஜக வழக்கறிஞர் சாடல்

By

Published : Jul 25, 2022, 6:48 AM IST

தூத்துக்குடி நகரின் பிரதான கழிவுநீர் கால்வாயான பக்கில் ஓடையை மழைக் காலத்திற்கு முன்பாகவே தூர்வாரும் பணிகள் தொடங்கப்படும். ஆனால், பக்கில் ஒடை சீரமைக்கும் பணியினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பக்கில் ஒடையானது ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலிருந்து திரேஸ்புரம் பகுதியில் கடலில் சென்று கலக்கும் விதமாக அமைந்துள்ளது. 7.5 கிலோ மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் உள்ளது. இந்த பக்கில் ஓடை பணியானது சிறிய அளவில் கூட குப்பை, அமலை செடிகளை அகற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வெகுவாக எழுந்துள்ளது.

இது குறித்து, பாஜக தெற்கு மாவட்ட துணை தலைவரும், வழக்கறிஞருமான வாரியார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி எம்பி கனிமொழி மெகா பக்கில் ஓடை சுத்தப்படுத்தும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 கிலோ மீட்டர் தூரம் சுத்தப்படுத்துவோம் என கூறிய நிலையில் 6 கிலோ மீட்டர் தூரம் அல்ல 6 மீட்டர் கூட சுத்தப்படுத்தவில்லை என்பது தான் உண்மை.

பாஜக வழக்கறிஞர் சாடல்

நேற்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைத்த நிகழ்ச்சியை திமுக கட்சியினர் விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் நடத்தியிருக்கிறார்கள். மக்கள் நலன் கருதி பக்கில் கால்வாயில் உள்ள அமலை செடிகளையும், குப்பைகளையும் அகற்றி, விரைவில், மழை காலம் தொடங்க உள்ளதால் இந்த கால கட்டத்தில், மக்கள் தண்ணீரில் அகப்பட்டு விடாமல் இருக்க ஓடையினை ஆழமாக விரைந்து சுத்தப்படுத்திட வேண்டும்.

கனிமொழி எம்பி மீண்டும் இந்த இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்து செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திராவிட மாடல் திட்டம் என்றாலே அன்று ஒரு நாள் மிக பெரிய அளவில் கொடியசைத்து தொடங்கி வைப்பது மட்டுமே, அதன் பின்னர் அது கேட்பாரற்று கிடப்பில் போடப்படும். அந்த திட்டத்தை அடுத்த நாள் சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.

புதியதாக மாநகராட்சி சார்பாக ஜேசிபி இயந்திரம் வாங்கியுள்ளனர். ஆனால் அது ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு பயன்பாடற்று கிடக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து உடனடியாக பக்கில் ஓடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அவர் கூறினார்.

இதையும் படிங்க:குரூப் 4 தேர்வு: பாஸ் என்ற பாஸ்கரன் பட காமெடி போன்ற சம்பவம்

ABOUT THE AUTHOR

...view details