தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1.75 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 24, 2022, 3:33 PM IST

தூத்துக்குடி துறைமுகத்திற்கு மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புள்ள அபின் என்ற போதைப்பொருள் வகையைச் சேர்ந்த பாப்பி சீட்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். துறைமுகம் வழியாக போதைப்பொருள் உள்ளிட்ட ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று (செப்.24) மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு போதைப்பொருள்கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்தது.

அதனடிப்படையில் மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கப்பலின் ஒரு கண்டெய்னரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அந்த கண்டெய்னரில் ஒயிட் சிமெண்ட் இருந்தது. அதற்கு பின்னர் ஈரம் புகாதவாறு பேக்கிங் செய்யப்பட்ட மூட்டைகளில் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட போதைப்பொருளான பாப்பி சீட்டுகள் இருந்தன.

இதைத்தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் எடை சுமார் 10 டன் என்றும் மதிப்பு ரூ.1.75 கோடி என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த ஷிப்பிங் நிறுவனம் மற்றும் மதுரையில் உள்ள இறக்குமதி நிறுவனத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதையும் படிங்க: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் பின்னணி என்ன? - முழு விவரம்

ABOUT THE AUTHOR

...view details