தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பல்கலை., இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் - அண்ணாமலை - அமரீந்தர் சிங்

பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை கைவிட்டு, தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியலை சட்டப்பேரவையில் தான் காண்பிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

By

Published : Sep 1, 2021, 8:05 PM IST

தூத்துக்குடி: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் வந்திறங்கினார்.

தொடர்ந்து அவர் சாலை வழியாக தென்காசி மாவட்டத்தில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றார். முன்னதாக விமான நிலையத்தில், அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, "தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் பூலித்தேவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சிகளுக்காக வந்துள்ளேன். தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளேன்.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இரண்டு கட்சிகளும் தமிழர்கள் சார்ந்த நலனுக்கான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும்.

தியாகிகள் நினைவிடம்

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் புனரமைக்கப்பட்டதன்மூலம் தியாகிகள் வரலாறு சிதைக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்‌ ராகுல்காந்தி மட்டுமே குற்றஞ்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கக்கூடிய அமரீந்தர் சிங், ஜாலியன் வாலாபாக் நினைவிடம் புனரைமைக்கபட்டதை "அழகு" என்று குறிப்பிட்டு வரவேற்றுள்ளார்.

எனவே, பிரதமர் மோடி, தலைமையிலான அரசு, தியாகிகள் நினைவிடத்தை செம்மைப்படுத்தியுள்ளது என்பதை மறுக்கமுடியாது.

பல்கலைக்கழகங்கள் இணைப்பு

1958 முதல் தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் முந்தைய முதலமைச்சரின் பெயரில் ஒருவர் செய்ததை மற்றொருவர் எடுப்பதும், மாற்றுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இந்த நடைமுறையை இந்த அரசாவது கைவிட வேண்டும். அதன்படி பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதையே பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரனும் பேரவையில் வலியுறுத்தினார்.

பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியலை காட்டப்போகிறோம் என திமுகவினர் சொன்னார்கள். அவர்கள், வித்தியாசமான அரசியலை சட்டப்பேரவையில் தான் காண்பிக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களை அதன் பெயரிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதையே பாஜக வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கும் என நம்புகிறோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details