தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் நிறைவுபெறும்' - கனிமொழி

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவுபெறும் என கனிமொழி எம்பி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கனிமொழி
கனிமொழி

By

Published : Jul 13, 2021, 4:56 PM IST

Updated : Jul 13, 2021, 5:55 PM IST

தூத்துக்குடி:வாகைக்குளம் விமான நிலையத்தில் கரோனா தடுப்பூசி முகாமை கனிமொழி எம்பி இன்று தொடங்கிவைத்தார். இதில் விமான நிலைய ஊழியர்கள், காவலர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தூத்துக்குடி விமான நிலையத்தில் பணியாற்றும் விமான நிலைய ஊழியர்கள் 180 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

2,90,000 பேருக்குத் தடுப்பூசி

தொடர்ந்து பரவலைக் குறைக்கும்விதமாக மாவட்டத்தின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றுபவர்களுக்கும், அனைத்துப் பகுதி மக்களுக்கும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடியில் தடுப்பூசி செலுத்தும் பணி

தூத்துக்குடியில் இதுவரை இரண்டு லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

விரைவில் நிறைவுபெறும்

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. விமான நிலைய விரிவாக்க சுற்றுச்சுவர் கட்டுதல், இரவு நேரங்களில் விமானம் தரை இறங்குவதற்கு வல்லநாடு மலைப்பகுதியில் சமிக்ஞை கோபுரம் அமைத்தல், விமான நிலைய ஓடுபாதை நீளம் அதிகப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இவை அனைத்தும் விரைவில் நிறைவுபெறும்.

வல்லநாடு பகுதியில் பாலத்தில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பு குறித்து ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலம் கட்டுமானத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்திவருகிறோம். விரைவில் அது சீர்செய்யப்படும்.

ராணுவ விமானங்களுக்கு...

விமான நிலையத்தில் ராணுவ விமானங்கள் தரை இறங்குவதற்குப் பிரத்யேகமாக ஓடுதளப் பாதை அமைப்பது குறித்து எதுவும் ஆலோசிக்கப்படவில்லை. இது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்" என்றார்.

தூத்துக்குடியில் தடுப்பூசி செலுத்தும் பணி

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் மேலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஒரு கோடி தடுப்பூசி வழங்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Last Updated : Jul 13, 2021, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details