தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டு ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், டவுன் டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், காவல் துறையினர் துறைமுகம் கடற்கரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மகேந்திரா வேனில் இருந்து, கடற்கரையில் நின்றுகொண்டிருந்த படகிற்குள் மஞ்சள் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த சிலர் காவல் துறையினரைக் கண்டதும் கடலுக்குள் நீந்தி தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து காவல் துறையினர் கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவித்தனர்.
மேலும், வேன் ஓட்டுநர் தூத்துக்குடி சிலுவைபட்டி இந்திரா நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் கோவிந்த பெருமாள், கிளீனர் சுனாமி காலனியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் சேர்மராஜா ஆகிய 2 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.