நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலை தீவிரமடைந்து வருவதால் தொழிற்துறையில் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்பும், உற்பத்தியில் தேக்க நிலையும் தீவிரமடைந்துள்ளது.
ஆட்டோமேஷனை காரணம் காட்டி 541 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சொமேட்டோ நிறுவனம்! - 9 old doctorate kid
டெல்லி: முன்னணி உணவு சேவை நிறுவனமான சொமேட்டோ தானியங்கி தொழில்நுட்ப வளர்ச்சியை காரணம் காட்டி 541 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில் முன்னணி உணவு சேவை நிறுவனமான சொமேட்டோ, தானியங்கி தொழில்நுட்பமான ஆட்டோமேஷனை காரணம் காட்டி தன்னிடம் வேலை செய்யும் 541 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. அதேசமயம் வேலையிழந்த ஊழியர்களின் நலன் கருதி இரு மாத சம்பளத்தை அளிப்பதாக அந்நிறுவமன் உறுதியளித்துள்ளது.
பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்கனவே இந்தியாவில் வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில், செலவு குறைப்பைக் காரணம் காட்டி சோமேட்டோ நிறுவனம் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.