தாமிரப்பரணி ஆற்றங்கரைகளில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புஷ்கரணி விழா நடந்தது. அதன் நீட்சியாக இந்த ஆண்டும் தொடர்ந்து நான்கு நாட்கள் தாமிரபரணி கரையோரம் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்தி நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், கதர் துறையில் நமது மாநிலம் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. சீன அதிபர் மாமல்லபுரம் வந்த போது, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு கதர் ஆடைகளை பரிசளித்தார். அந்த ஆடைகள் தமிழ்நாடு கதர் துறையில் சார்பில் தயாரிக்கப்பட்டது.
இதுவே தமிழ்நாட்டு கதர் பொருட்களின் வளர்ச்சிக்கு சான்றாகும். உள்ளாட்சி தேர்தல் உள்பட எந்த தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவுள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அமெரிக்க பயணம் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்றார்.
அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேட்டி இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம், சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? என்பது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், “சசிகலா திரும்பி வரும்போது அதுகுறித்து பார்த்துக் கொள்ளலாம்” என்றார். இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்னா ஸ்டாலினுக்கு பயம் - செல்லூர் ராஜு!