திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் கரோனோ தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊர்க்காவல் படை காவலர் சுப்பையா சமீபத்தில் பணி முடித்துவிட்டு வீடு திரும்பும்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதையடுத்து, அவரது குடும்பத்திற்கு மாவட்ட காவல் துறையினர் உதவிசெய்ய முன்வந்தனர். அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஏற்பாட்டின்படி காவலர்கள் தாங்களாக முன்வந்து நிதியை மாவட்ட காவல் நிர்வாகத்திடம் வழங்கினர்.