தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டியிலனத்தைச் சேர்ந்த ஏழு பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அரசாணை வெளியிடக்கோரி அந்த சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (அக். 6) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. நெல்லை ஊருடையான் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுவருகின்றனர். அதேபோல், நெல்லை சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகிறது.