சென்னை:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், இவர்கள் நான்கு பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், இறுதி தீர்ப்பின்போது ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேர் மட்டும் சிறைத்தண்டனை அனுபவித்தனர்.
தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி
இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் நான்கு பேரின் சொத்துகளும் முடக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இச்சூழ்நிலையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரின் சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மா, சென்னை மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார்.
வழக்கறிஞரின் கடிதம்
அந்த கடிதத்தில் அவர், 'சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்களால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் அரசு மூலம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது எனில், என்னென்ன சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தருக.
சொத்து முடக்கம் செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான தேதியில் இருந்து எத்தனை தினங்களுக்குள் சொத்தினை முடக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன் விவரம் தருக.
சொத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது எனில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்குரிய காரணம், குறிப்புகள் ஆகியவற்றைத் தருக. உச்ச நீதிமன்றத்தால் முடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள சொத்துகள் தவிர, மற்ற என்னென்ன சொத்துக்கள் முடக்கம் செய்யப்படாமல் உள்ளது என்ற விவரம் தருக.
மாவட்டம் + மாநிலம்