திருநெல்வேலி: இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 20) திருநெல்வேலியில் உள்ள கேடிசி நகர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த தபால் தலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.