தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நவீன மீன் கடை திறப்பு - fish shop

நெல்லை கிராப்ட் வளாகத்தில் மீன்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் கடையை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

நவீன மீன் கடை திறப்பு
நவீன மீன் கடை திறப்பு

By

Published : Jul 15, 2021, 11:51 AM IST

நெல்லை : புதிய பேருந்து நிலையம் அருகே நெல்லை கிராப்ட் வளாகத்தில் மீன்வளத்துறை சார்பில் நவீன மீன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து நெல்லை கிராப்டில் உள்ள கைவினை பொருட்கள் விற்பனைக்கான இணையதள சேவையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பாளையங்கோட்டை பாப்பாக்குடி மானூர் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் நேரில் இன்று ஆய்வு செய்கிறார்.


பின்னர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாலை நடைபெறும் துறைரீதியான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்கிறார்.

இதையும் படிங்க :அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களுக்கு பொறுப்பேற்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

ABOUT THE AUTHOR

...view details