தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்த அமெரிக்க சுற்றுலாப்பயணி கைது - விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்த அமெரிக்க சுற்றுலாப்பயணி கைது

விசா காலம் முடிந்தும், சட்டவிரோதமாக இந்தியாவில் சுற்றித்திரிந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டார்.

American tourist
American tourist

By

Published : Apr 20, 2022, 10:05 PM IST

திருநெல்வேலி: அமெரிக்காவைச் சார்ந்த வெரிட் என்ற சுற்றுலா பயணி, கடந்த 2019ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். அவரின் விசா கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி முடிவடைந்துள்ளது. ஆனால், அவர் விசா முடிந்த பின்னரும் இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஏப். 19) இரவு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி கடற்கரை கிராமத்தில் வெரிட் இருந்த பொழுது, உவரி காவல் துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் விசா முடிந்தும் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்தது தெரியவந்ததால், அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச்சென்ற புது மாப்பிள்ளை வெட்டி கொலை; 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details