திருநெல்வேலி: வள்ளியூர் அருகே உள்ள கிழவனேரி கிராமத்தை சேர்ந்தவர் சமீர் ராஜா. இவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் இடத்தை ஆவணங்களை சரிபார்க்காமல் ராதாபுரம் சார்பதிவு அலுவலர் சரவண மாரியப்பன் போலியாக வேறுநபருக்கு பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சார்பதிவாளரை கண்டிக்கும் வகையில் சமீர் மற்றும் அவரது நண்பர் பிரசாத் ஆகியோர் சார் பதிவாளர் அலுவலகம் முன் பதாகை வைத்தனர். அதில், இராதாபுரம்திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு நிலங்கள் இருந்தாலும்,நிலத்தின் உரிமையாளர் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ, மிக அருகிலோ இருந்தாலும், அவர்களுக்கு சிரமம் கொடுக்காமல், எந்த வித அசல் ஆவணங்கள் இல்லாமலும், சொத்தின் உரிமையாளர் கையொப்பம் இன்றி சொத்து மதிப்பில் 10 விழுக்காடு கமிஷன் கொடுக்கும் நபருக்கு சார் பதிவாளர் சரவணமாரியப்பன் உடனே கிரைய ஆவணமோ, செட்டில் மெண்ட் ஆவணமோ பதிவு செய்து கொடுத்து பொதுமக்களின் நன் மதிப்பை பெற்று சிறந்து விளங்கி வருகிறார். இந்த சேவை செம்மல் சார்பதிவாளரை வாழ்த்தி வணங்குகிறோம். இவரது பணியை செவ்வனே செய்ய உறுதுணையாக இருந்து வரும் இராதாபுரம் வருவாய் துணை வட்டாட்சியர் அவர்களையும் வாழ்த்தி வணங்குகிறாம்.