திருநெல்வேலிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில் தினமும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகள் தொடர்பாக, மனுக்கள் அளிக்க என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வார்கள்.
ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்கள் உணவு மற்றும் தேநீர் அருந்த அலுவலகத்தின் பின்புறத்தில் தனியார் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (செப். 10) காலை முருகன் என்பவர் தனது தேநீர் கடையை திறந்து வியபாரத்தை தொடங்கிய நிலையில் சிலர் தேநீர் அருந்த கடைக்கு உள்ளே வந்தனர்.
அப்போது கடையின் உள்ளே உள்ள சுவற்றில் கருமையான நிறத்தில் சுமார் 2 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நின்றிருந்தது. இதனைப்பார்த்த கடைக்கு தேநீர் அருந்த வந்தவர்கள் அச்சத்தில் கடையைவிட்டு அலறியடித்து வெளியில் ஓடினர். பின்னர், உடனடியாக கடையின் உரிமையாளர் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.