தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’நெல்லை மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த பணியாற்றுவேன்’: புதியதாக பொறுப்பேற்ற ஆட்சியர் சூளுரை - district collector vishnu

நெல்லை: நெல்லை மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த பணியாற்றவுள்ளதாக புதியதாக பொறுப்பேற்ற ஆட்சியர் விஷ்ணு உறுதியளித்துள்ளார்.

district collector vishnu
புதியதாக பொறுப்பேற்ற ஆட்சியர் விஷ்ணு

By

Published : Nov 16, 2020, 10:03 AM IST

நெல்லை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ் சமீபத்தில் சுகாதாரத் துறை இணை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் நெல்லை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த விஷ்ணு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

இவர் நெல்லை மாவட்டத்தின் 37ஆவது புதிய ஆட்சியராக நேற்று (நவ.15) பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாவட்டத்தின் வளர்ச்சித்திட்ட பணிகள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்றவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன்”என்றார்.

புதியதாக பொறுப்பேற்ற ஆட்சியர் விஷ்ணு

மாநகர் பகுதியில் ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடப்பதால் சேதமடைந்த சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு, ”திட்டப்பணிகள் எந்த அளவு நடந்து முடிந்துள்ளது என்பதை ஆய்வு செய்து அதற்கேற்றார்போல நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிலளித்தார்.

இதையும் படிங்க:பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும் - வேலூர் ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details