தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை தான் சரி  - பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் - அக்னிபத்

எம்ஜிஆரால் உருவாக்கி வளர்க்கப்பட்ட அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நல்ல தலைவராக யார் தகுதியுள்ளவர்களோ அவரே வரவேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ
நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ

By

Published : Jun 21, 2022, 3:39 PM IST

Updated : Jun 21, 2022, 3:58 PM IST

திருநெல்வேலி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன்21) நெல்லை, சங்கர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவை குழு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், 'அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். ஏழை எளிய மக்களுக்காக எம்ஜிஆரால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கட்சி. கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் தொண்டர்களின் மனநிலைக்கேற்ப நல்ல தலைவராக யார் நல்லவரோ, தகுதியானவரோ அவரே வரவேண்டும்.

அதிமுக கட்சியின் விதி 20 B-ன் படி அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொள்ளவேண்டும். நகர பஞ்சாயத்து செயலாளர் தொடங்கி பல உறுப்பினர்கள் எம்ஜிஆர் காலம் முதல் பொதுக்குழுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு திறமை மிக்க ஒரு தலைமை வேண்டும். அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை சரிதான்' என்று தெரிவித்தார்.

மேலும் அவர், 'அக்னிபத்' பிரதமரின் அற்புதமான திட்டம் ஆகும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 30 ஆயிரம் மாதச்சம்பளம் என்ற அற்புதமான திட்டம் உலகில் எங்கும் இல்லை. அக்னிபத் திட்டத்திற்கு எதிராக அகில இந்திய அளவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மக்களைத் தூண்டி விடுகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்திற்கு எதிராக மக்களை மறைவில் இருந்து திமுக தூண்டுகிறது' என்றார்.

மேலும், '63 கலைகளும் உருவான நாடு பாரத நாடு. சுவாமி விவேகானந்தர் வாக்கு இப்போது நடந்து வருகிறது. உலக நாட்டின் எங்கும் இல்லாத பெருமை இந்திய நாட்டுக்கு இருக்கிறது. கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவைகளின் காரணமாக இந்தியாவை உலக நாடுகள் திரும்பிப் பார்க்கின்றன. உலகத்தின் அனைத்து பிரதமர்களின் யோகா குருவாக மோடி திகழ்ந்துவருகிறார்’ எனத் தெரிவித்தார்.

’காங்கிரஸ் கட்சி நாட்டுமக்களுக்கு நன்மை செய்யும் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி இல்லாமல் போய்விட்டது. திமுகவுடன் காங்கிரஸ் இல்லை என்றால், தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் இல்லாமல் போய்விடும்’ என்று தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி

இதையும் படிங்க: அதிமுக விதிகளை திருத்த தடை கோரிய மனு நாளை விசாரணை - நடக்குமா பொதுக்குழு ?

Last Updated : Jun 21, 2022, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details