விவசாய நிலங்களை அழிக்கும் வகையில் செயல்படுத்த உள்ள ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நெல்லை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள், இத்திட்டங்களை எதிர்த்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஹைட்ரோகார்பன் திட்டம் - சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - ஹைட்ரோகார்பன்
திருநெல்வேலி: ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களை மத்திய - மாநில அரசுகள் கைவிடக்கோரி, நெல்லை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டக் கல்லூரி மாணவர்ட்கள் ஆர்ப்பாட்டம்
அப்போது, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களை கண்டித்தும், மத்திய - மாநில அரசுகள் இதனை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.