தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 21, 2021, 8:45 AM IST

ETV Bharat / city

போராட்டம் எதிரொலி: கூடங்குளம் அணுமின் நிலைய பொறியாளர் தேர்வு நிறுத்தி வைப்பு

பொதுமக்களின் தொடர் போராட்டத்தால், கூடங்குளம் அணுமின் நிலைய பொறியாளர் தேர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

kudankulam power station engineer interview postponed due to public protestaion, kudankulam public protest, மக்கள் போராட்டத்தால் அணுமின் நிலைய பொறியாளர் தேர்வு நிறத்தி வைப்பு, கூடன்குளத்தில் மக்கள் போராட்டம்
கூடங்குளம் அணுமின் நிலைய பொறியாளர் தேர்வு நிறுத்தி வைப்பு

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தப் பணியில் மாதம்தோறும் 64ஆயிரம் ரூபாயில் பணியாற்ற நேற்று முன்தினம் (டிசம்பர் 19) நேர்முகத்தேர்வு அணுமின் நிலைய அனுவிஜய் நகரிய குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது .

34 பதவிகளுக்கு 1,700 பேர் தேர்வு எழுதினர். இதில், 170 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு நேற்றும், இன்றும் தேர்வுகள் நடைபெறுகின்றன.

வேலை நிறுத்தப் போராட்டம்

தேர்வர்கள் யாரும் கூடங்குளம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் யாருமில்லை. இதனையடுத்து, கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசன் வாட்ஸ்-அப் செயலி மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அங்குள்ள ஒப்பந்த பணியாளர்கள் யாரும் நேற்று வேலைக்கு செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து, நேற்று காலை சுமார் ஏழு முப்பது மணி அளவில் கூடங்குளம் பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தன்னிச்சையாக கூடங்குளம் அணுமின் நிலைய நுழைவு பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதனால், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள், அணுமின் நிலைய பணியாளர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் .அதன்பின் உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமையில் ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து, நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணன் ஆகியோர் முன்னிலையில் ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது. கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் மனோகாட் போலே, கூடங்குளம் அணுமின் நிலைய 5, 6 அணு உலைகளில் திட்ட இயக்குநர் எம். எஸ் .சுரேஷ், கூடங்குளம் அணுமின் நிலைய மனிதவள மேம்பாட்டு பொது மேலாளர் அன்புமணி ஆகியோர் பங்கேற்றனர்.

ஒத்திவைப்பு

பேச்சுவார்த்தை முடிவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று முன்தினம் நடத்திய பொறியாளர்களுக்கான தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (டிசம்பர் 21) நடைபெற திட்டமிட்டிருந்த நேர்முகத்தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையும் படிங்க: வைரல் வீடியோ : தாய் குரங்கின் பாசப்போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details