திருநெல்வேலி:நான்குநேரி அருகே உள்ளது தெற்கு விஜயநாராயணம். இங்கு பெரும்பகுதி இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடி மாதம் 16 ஆம் தேதி மேத்தப் பிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை பிறை கணக்கிட்டு தங்கள் மதப்படி கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆனால், இங்கு மட்டும் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 16 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வழக்கம் 250 வருடங்களாக பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கந்தூரி விழாவை இவ்வூரில் உள்ள இந்துக்களே நடத்துகின்றனர். விழாவிற்காக கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் விஜயநாரயணத்திற்கு வருவது வழக்கம்.
முற்காலத்தில் இஸ்லாமிய சமூகத்தினரும் இந்துக்களும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும், பின்னர் ஏற்பட்ட பிரச்சனையில் ஆடி மாதம் 16 ஆம் தேதி மேத்த பிள்ளை என்ற முஸ்லீம் கொலை செய்யப்பட்டார்.