தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணை கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட பெனிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். காவல்துறையினரின் துன்புறுத்தலால்தான் பெனிக்ஸும், ஜெயராஜும் உயிரிழந்ததாக தெரிவித்து உறவினர்கள் நேற்று (ஜூன் 23) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உறவினர்கள் முன்னிலையில் பெனிக்ஸ், ஜெயராஜ் உடல்களை ஆய்வு செய்த நீதிபதி! - father and son died case update
திருநெல்வேலி: பெனிக்ஸ், ஜெயராஜின் உடல்களை அவர்களது உறவினர்கள் முன்னிலையில் நீதிபதி பாரதிதாசன் இன்று ஆய்வு செய்தார்.
மேலும், இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக கோவில்பட்டி ஜெ.எம். நீதிபதி நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். ஆனால், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பெனிக்ஸ், ஜெயராஜின் உடல்களைப் பெறமால் போராட்டம் நடத்திவந்தனர். இதனால், நேற்று உடற்கூறாய்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி பாரதிதாசன் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முன்னிலையில் பெனிக்ஸ், ஜெயராஜின் உடல்களில் என்னென்ன காயங்கள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க:கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் முற்றுகை போராட்டம்!